கை கழுவுவதின் அபார சக்தி
1,426,996 plays|
மிரியம் சிட்பே |
TED@Unilever
• September 2014
மிரியம் சிட்பே சிறு குழந்தைகளின் வியாதிகளுக்கு எதிராகப் போர்கள் நடத்தும் வீராங்கனை.அவள் இதற்காகத் தேர்ந்தெடுத்த ஆயுதம்?ஒரு சோப்புக் கட்டி. குறைந்த செலவில் வியாதிகளிலிருந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பதற்கு சோப்பினால் கைகழுவுவதைக் காட்டிலும் சிறந்த உத்தி இல்லை. அது நிமோனியா, பேதி, காலரா மேலும் அவைகளை விட மோசமான வியாதிகள் பலவற்றின் அபாயங்களை குறைக்கிறது. பொது சுகாதார நிபுணரான சிட்பே, சுத்தமான கைகளைப் பிரபலப்படுத்துவதற்காக, பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து பணியாற்றவும் மேலும் உள்ளூர் நிரந்தர முயற்சிகள் தேவையென்றும் சிறப்பாக வாதாடுகிறார்.