"பஸ்ஸகாக்லியா" எனப்படும் ஓர் இசை வடிவத்தை, இருவரிசையாக வழங்கும் ரொபர்ட் குப்தாவும், ஜோஷுவா ரோமனும்.
943,929 plays|
Robert Gupta + Joshua Roman |
TED2011
• March 2011
வையோலின் இசைக்கலைஞர் ரொபர்ட் குப்தாவும், வயோலா இசைக்கலைஞர் ஜோஷுவாவும், ஹல்வோர்சன்னின் "பஸ்ஸகாக்லியா" என்னும் ஒரு எசுப்பானிய இசைவடிவத்தை, ஒப்பற்ற ஓர் கூட்டுமுயற்சியாக நமக்கு வழங்குகின்றனர். "ஸ்ட்ராடிவோரிய" பழைமையை பறைசாற்றும் விதமாய் அமைந்த வயொலாவினை ரோமன் இசைக்கிறார். நொடிக்கு நொடி இரு கலைஞர்களும் பிண்ணிப் பிணைந்து படைக்கும் இசையை (இடையில் ஏற்படும் தடங்கலை எத்தனை லாவகமாக கையாண்டு மீண்டு வருகின்றனர் என்பதையும்) கேட்டு சுவைக்க எத்தனை இன்பம். இவர்கள் இருவரும் TED அன்பர்கள் என்பதும், அவர்களின் பிணைப்பு, இந்த இருவரிசையை எவ்வாறு சிறப்பாக்குகிறது என்பதும் நாம் அறியவேண்டியது.